சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 15 வயது சிறுவன் கைது


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 15 வயது சிறுவன் கைது
x
தினத்தந்தி 4 Jun 2020 5:20 AM IST (Updated: 4 Jun 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படங்களை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

காரைக்கால்,

காரைக்கால் மீராப்பள்ளித் தோட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 மற்றும் 8 வயதுடைய 2 சிறுமிகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே உஷாரான சிறுமிகள் அங்கிருந்து தப்பிச் சென்று தனது பெற்றோர் களிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பில் புகார் செய்தனர். அதன்பேரில் சைல்டுலைன் நிர்வாகிகள் விசாரணை நடத்தியதில் சிறுவன், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் 15 வயது சிறுவனை கைது செய்து புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Next Story