திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 5:29 AM IST (Updated: 4 Jun 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள பட்டினத்தார் சுடுகாட்டில் புதைப்பதற்காக அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் 86 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தார். அவரது உடலை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள பட்டினத்தார் சுடுகாட்டில் புதைப்பதற்காக அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் ஒரே நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்த 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை புதைக்க போவதாக வதந்தி பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்து போனவர்களின் உடல்களை புதைக்கக்கூடாது என்று கோரி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஒருவருடைய உடலை மட்டும் உரிய பாதுகாப்புடன் புதைக்க உள்ளதாக விளக்கி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story