மதகடிப்பட்டு ஊரல் குளத்தில் போலீசார் தோண்டிய பள்ளத்தை மூடி மணல் கடத்தல்
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு ஊரல் குளத்தில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
திருபுவனை,
போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் குளத்தில் மணல் திருடுவதை தடுக்கும் விதமாக மாட்டுவண்டிகள், லாரிகள் வரமுடியாத அளவிற்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளத்தை தோண்டி வழிபாதையை துண்டித்தனர்.
நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் போலீசார் தோண்டிய பள்ளத்தை மூடி அதன் வழியாக குளத்தின் மணலை அள்ளி சென்றுள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story