வேடசந்தூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


வேடசந்தூர் அருகே   சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Jun 2020 5:45 AM IST (Updated: 4 Jun 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் சீனிவாசன் (வயது 21). இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று நவாமரத்துப்பட்டியில் உள்ள காளியப்பன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்தநிலையில் சிறுமியின் உறவினர்கள், வேடசந்தூர் போலீசாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, சிறுமிக்கு நடைபெற உள்ள திருமணம் குறித்து தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் காளியப்பன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தி, 2 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமிக்கு 18 வயது முடிவடைந்த பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர். பின்னர் பெற்றோர்கள், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பிறகு திருமணத்தை நடத்தி கொள்கிறோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களுடன் சிறுமியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story