மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 122 பேர் பலி + "||" + To Corona in Maratham 122 people killed Overnight

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 122 பேர் பலி

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 122 பேர் பலி
மராட்டியத்தில் ஒரேநாளில் 122 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு வருகிறது. இங்கு பாதித்தோர் எண்ணிக்கையை போல, உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 560 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்து 860 ஆக உயர்ந்து உள்ளது.


இதற்கிடையே அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே நாளில் 116 பேர் நோய் தொற்றுக்கு பலியாகி இருந்தனர். நேற்று முன்தினம் கூட 103 பேர் உயிர் இழந்தனர்.

இதேபோல நேற்று மாநிலத்தில் ஒரேநாளில் 122 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 49 பேர் மும்பைைய சேர்ந்தவர்கள்.

இதுதவிர மற்ற இடங்களில் பலியானவர்கள் விவரம்:- உல்லாஸ் நகா் - 3, நவிமும்பை - 3, தானே - 2, மிரா பயந்தர் - 1, வசாய் விரார் -1, பிவண்டி - 1, துலே - 4, ஜல்காவ் - 2, அகமதுநகர் - 1, நர்துர்புர் -1, புனே - 19, சோலாப்பூர் - 10, கோலாப்பூர் -2, அவுரங்காபாத் - 16, ஜால்னா-1, ஒஸ்மனாபாத் -1, அகோலா -2, மற்ற மாநிலத்தவர்கள் - 3.

மாநிலத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 587 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனா்.

மராட்டியத்தில் தற்போது 5 லட்சத்து 71 ஆயிரத்து 915 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 674 பேர் தனிமை மையங்களில் உள்ளனர். தனிமை மையங்களில் 71 ஆயிரத்து 912 படுக்கைகள் காலியாக உள்ளன.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 4,188 (85 பேர் பலி), தானே புறநகர் - 864 (8), நவிமும்பை மாநகராட்சி - 3,001 (74), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,444 (27), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 406 (9), பிவண்டி மாநகராட்சி - 199 (7), மிரா பயந்தர் மாநகராட்சி - 763 (30), வசாய் விரார் மாநகராட்சி - 1,028 (31), ராய்காட் - 673 (26),

பன்வெல் மாநகராட்சி - 565 (25). மாலேகாவ் மாநகராட்சி - 762 (58). புனே மாநகராட்சி - 7,390 (343), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 502 (11), சோலாப்பூர் மாநகராட்சி - 973 (80), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,609 (83), நாக்பூர் மாநகராட்சி - 596 (11).

மும்பையை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 1,276 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 492 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல 27 ஆண்கள், 22 பெண்கள் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,417 ஆக உயர்ந்து உள்ளது. மும்பையில் இதுவரை 17 ஆயிரத்து 472 பேர் குணமாகி உள்ளனர். புயல் காரணமாக மும்பையில் மழை பெய்து உள்ள நிலையில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சளி, இருமல், வயிற்று போக்கு, குளிர் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு பொது மக்களை மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நடைபாதையில் விற்கப்படும் உணவுப்பொருள்களை தவிர்த்து வீட்டிலேயே சாப்பிடுமாறும் பொது மக்களை மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா 181 பேர் பலி
மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் பலியாகி உள்ளனர்.
2. மராட்டியத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் மேலும் 5 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
3. மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி - சாவு எண்ணிக்க்கை 118 ஆக உயர்வு
கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
5. மராட்டியத்தில் பருவமழை தீவிரம் - மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம்
மராட்டியத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதன் மூலம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம் அடைந்தனர்.