உத்தமபாளையம் அருகே ஒற்றை மூக்கு துவாரத்துடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி


உத்தமபாளையம் அருகே  ஒற்றை மூக்கு துவாரத்துடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
x
தினத்தந்தி 4 Jun 2020 6:58 AM IST (Updated: 4 Jun 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே ஒற்றை மூக்கு துவாரத்துடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

கம்பம்,

உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த காசிமாயன் மனைவி லதா. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வீட்டில் வளர்த்து வரும் பசுமாடு சமீபத்தில் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அந்த கன்று குட்டிக்கு 2 மூக்கு துவாரத்துக்கு பதில் ஒரு மூக்கு துவாரம் மட்டுமே இருந்தது. மேலும் இந்த குறைபாட்டால் அந்த கன்றுக்குட்டி இரை எதுவும் சாப்பிட முடியாமல் தவிக்கிறது. இதனால் கன்றுக்குட்டியை லதா உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர் காமேஷ் கண்ணன் கூறுகையில், “அது கலப்பின கன்று. பிறவிக்குறைபாட்டுடன் பிறந்துள்ளது. இதுபோன்ற குறைபாடு லட்சத்தில் ஒரு கன்றுக்கு வர வாய்ப்புள்ளது. ஒற்றை மூக்கு துவாரம் மட்டுமே உள்ளதால் தாடை வளர்ச்சி சீரற்ற நிலையில் இருக்கிறது. இதனால் அது இரை சாப்பிட முடியாமல் தவிக்கிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாமா என்பது குறித்து கால்நடை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார். சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட இந்த அதிசய கன்றுக்குட்டியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


Next Story