தேனியில் ரூ.89 கோடியில் சர்வதேச தரத்தில் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்


தேனியில் ரூ.89 கோடியில் சர்வதேச தரத்தில் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம்  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jun 2020 7:29 AM IST (Updated: 4 Jun 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி, 

தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. இது தமிழகத்தின் 14-வது சட்டக்கல்லூரி ஆகும். இந்த கல்லூரி தற்போது வீரபாண்டி அருகே உப்பார்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு 3 ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்பில் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் சாலையோரம் தேனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு கல்லூரி வளாகம் மற்றும் மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.89 கோடியே 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பூமி பூஜை

இந்த கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் கட்டுமான பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதிதாக கட்டப்பட உள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் அமைய உள்ளன. மொத்தம் 26 வகுப்பறைகள், 400 மாணவர்கள் அமரும் வகையில் கருத்தரங்கக்கூடம், காணொலி காட்சி அறை, சொற்பொழிவு அறை, மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி ஓய்வு அறைகள், கணினி ஆய்வகம், உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச மாதிரி நீதிமன்ற போட்டிகளில் பங்கேற்க சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம், நிர்வாக தொகுதிக் கட்டிடங்கள், அதிவேக இணையதள வசதியுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அங்கிய நூலக கட்டிடங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.

கலந்துகொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, சென்னை சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி சட்டக்கல்லூரி தனி அலுவலர் அருண், அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் டி.கே.ஆர்.கணேசன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், துணைசெயலாளர் பாலைராஜா, உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணைத்தலைவருமான வரதராஜன், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், ஒன்றிய குழு துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ், போடி ஒன்றியக்குழு தலைவர் சுதாமூர்த்தி, துணைத்தலைவர் வெங்கடேசன், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி நடேஷ், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் தலைவரும் காமயகவுண்டன்பட்டி பேரூர் செயலாளருமான திருலோகசுந்தர், கம்பம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவீந்திரன், ஈரோடு வெங்கடாசலபதி கட்டுமான நிறுவன உரிமையாளர் வெங்கடாசலபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story