கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டி; மாணவ-மாணவிகள் பங்கேற்பு


கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டி; மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 7:48 AM IST (Updated: 4 Jun 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில் நடந்தது.

தர்மபுரி,

ஓவியப் போட்டியை தர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த், தர்மபுரி நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு துறையினர் போட்டியை முன்னின்று நடத்தினார்கள்.

இந்த போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து ஓவியங்களை வரைந்தனர்.

இந்த போட்டியில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களை சிறப்பான முறையில் வரைந்து சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான ஓவிய போட்டிக்கு தகுதி பெறுகிறார்கள். 

Next Story