தொழிலாளி கொலையில் அரிசி ஆலை காவலாளி கைது
ராஜபாளையம் அருகே தொழிலாளி கொலையில் அரிசி ஆலை காவலாளி கைது செய்யப்பட்டார்.
தளவாய்புரம்
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்லம்கொண்டான் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந் தேதி நள்ளிரவு அரிசி ஆலையில் கண்ணன் பணியில் இருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அரிசி ஆலையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் சிறிது நேரம் ஓடி கண்மாய் கரையில் படுத்து கொண்டது.
கைது
இந்தநிலையில் அரிசி ஆலையில் காவலாளியாக பணிபுரிந்த முகவூர் பகுதியை சேர்ந்த பெரியாண்டவர்(53) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தான் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெரியாண்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவலாளியாக இருந்த பெரியாண்டவர் ஆலையில் இருந்து அரிசியை கடத்தி உள்ளார்.
இதை கண்ணன் அரிசி ஆலை உரிமையாளரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்ணனுக்கும், பெரியாண்டவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அந்த முன்பகை காரணமாக அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story