சங்கராபுரத்தில் சொட்டுநீர் பாசன குழாய் குடோனில் தீ விபத்து
சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவர் சொட்டு நீர் பாசன குழாயை சங்கராபுரத்தில் உள்ள தனது குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தார்.
சங்கராபுரம்,
குடோனில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த சொட்டு நீர்பாசன குழாய்கள் கொழுந்து விட்டு எரிந்ததால், அதில் இருந்து அதிக அளவு புகை வெளியேறியது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனே சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன குழாய்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story