தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கரூர்,
தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்தன.
வெளிநடப்பு
கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர் ராஜா பேசுகையில், ஒன்றியத்தின் பொது நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 11 வார்டுகள் உள்ள நிலையில், பிற வார்டுகளுக்கு நலத்திட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து, மற்ற வார்டுகளை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்களான கல்யாணி, அன்பரசு, புஷ்பா, கவிதா ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அங்கிருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன், மொத்தம் 144 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஒன்றிய கூட்டம் நிறைவுபெற்றது.
Related Tags :
Next Story