காஞ்சீபுரம் மாவட்டத்தில் 12 பள்ளி விடுதிகள் 11-ந்தேதி திறப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 12 பள்ளி விடுதிகள் 11-ந்தேதி திறப்பு
x
தினத்தந்தி 5 Jun 2020 3:30 AM IST (Updated: 5 Jun 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 12 பள்ளி விடுதிகள் 11-ந்தேதி திறக்கவுள்ளதால் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

காஞ்சீபுரம்,

2019-20ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் வழிகாட்டுதலுக்கு இணங்க, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 12 பள்ளி விடுதிகள் வருகிற 11ந்தேதி திறக்கப்படும்.

இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் தங்கி பொதுத்தேர்வு எழுதும் வகையில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு தூய்மை செய்யப்பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுதிகளில் தங்கி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story