கோவையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் தந்தையின் நண்பர் உள்பட 3 பேர் கைது
கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையின் நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து போலீசில் கூறியதாவது:-
15 வயது சிறுமி மாயம்
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மாயமானாள். இதுகுறித்து அவருடைய தந்தை போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்தநிலையில் 2 நாள் கழித்து சிறுமி வீட்டுக்கு வந்தார். அப்போது அழுதபடியே பெற்றோரிடம் தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் மீண்டும் புகார் செய்தனர். இதன்பேரில் கோவை கிழக்குப் பகுதி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பாலியல் பலாத்காரம்
சிறுமி கடந்த 1-ந் தேதி தனது நண்பரை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது நண்பர் இல்லை. இதனால் தனது வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த சிறுமியின் தந்தையின் நண்பரான ஆட்டோ டிரைவர் செல்வம் (வயது 30) என்பவர் அங்கு வந்தார்.
சிறுமியை பார்த்த அவர், இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி தனது நண்பரை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து இரவு நேரத்தில் தனியாக செல்லக்கூடாது. எனது வீட்டில் இரவில் தங்கிக்கொள். காலையில் உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று சிறுமியிடம் செல்வம் கூறினார்.
தந்தையின் நண்பர்தானே என்று சிறுமி, செல்வம் அழைத்துச்சென்ற ஒரு வீட்டில் தங்கினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. சிறுமியை அறையில் அடைத்து வைத்து செல்வம் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மறுநாள் போத்தனூர் காந்திநகரை சேர்ந்த டீ மாஸ்டர் ராஜன் (35), ஈச்சனாரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சூர்யராஜ் (30) ஆகிய 2 பேர் சிறுமியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியிடம் அவர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சிறுமியின் வீட்டருகே அவரை விட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செல்வம், டீ மாஸ்டர் ராஜன், கார் டிரைவர் சூர்யராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story