பொதுமக்களை கவரும் வகையில் உக்கடம் பெரியகுளக்கரையில் ‘செல்பி ஸ்பாட்’
பொதுமக்களை கவரும் வகையில் உக்கடம் பெரிய குளக்கரையில் ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.998 கோடி செலவில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் உள்பட பல்வேறு குளங்கள் மேம்படுத்துதல், 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டம், சோடியம் விளக்குகளை அகற்றி எல்.இ.டி விளக்குக்குகள் பொருத்தும் பணி, அடுக்குமாடி வாகன நிறுத்தம், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் உக்கடம் பெரியகுளத்தில் கரைகளை அழகுபடுத்துதல் மற்றும் நவீன வசதிகள் அமைக்கும் பணிக்காக ரூ.62 கோடி நிதி ஒதுக்கி, நடைபாதை தளம், சிறுவர்களுக்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
செல்பி ஸ்பாட்
அதன்படி உக்கடம் பெரிய குளக்கரையில் ‘ஐ லவ் கோவை’ என்கிற வாசகம் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கவரும் வகையில், இரும்பு தகடினால் உருவாக்கப்பட்ட இந்த எழுத்துக்கள் அருகில் பொதுமக்கள் செல்போன் மூலம் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடம் ‘செல்பி ஸ்பாட்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. ஐ லவ் கோவை என்ற ஆங்கில எழுத்துக்கள் அருகில் நின்று குளத்தின் தண்ணீர் பின்னால் தெரியும் வகையில் செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று அதை வடிவமைத்தவர்கள் கூறினார்கள். இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story