குளம் தூர்வாரும் பணி அமைச்சர் காமராஜ் ஆய்வு


குளம் தூர்வாரும் பணி அமைச்சர் காமராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2020 4:44 AM IST (Updated: 5 Jun 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

வலங்கைமான், 

வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூர் ஒத்தகுளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. 

இந்த பணியை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். முன்னதாக ரெகுநாதபுரம் ஊராட்சி கொட்டபடுகை, அவளிவநல்லூர், மணக்கால், விளத்தூர், களத்தூர், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் குறைகள் கேட்டார். 

ஆய்வின்போது முன்னாள் எம்.பி. கோபால், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், துணைத்தலைவர் வாசுதேவன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், தாசில்தார் கண்ணன், ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், உஷாராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story