ஜிப்மர் காவலாளிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா


ஜிப்மர் காவலாளிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jun 2020 5:26 AM IST (Updated: 5 Jun 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை காவலாளிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 63 ஆனது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 57 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அதேபோல் நேற்று ஒரேநாளில் மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஜிப்மர் மருத்துவமனை காவலாளிகள், ஒருவர் ஜிப்மர் சலவை கூடத்தில் பணி புரிபவர், மேலும் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு கார் டிரைவராக பணிபுரிந்தவர். மற்றொருவர் கடலூருக்கு சென்று வந்த தனியார் நிறுவன ஊழியரும் ஆவர். இதில் 8 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் மட்டும் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவை மாநிலத்தில் (புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்பட) இதுவரை ஒட்டுமொத்தமாக 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 63 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுவை மாநிலத்தில் இதுவரை 7,576 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேருக்கு மட்டும் தான் முடிவுகள் வர வேண்டியுள்ளது. 

Next Story