கொரோனா பணிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தல் குமரி கலெக்டரிடம், யூனியன் தலைவர்கள் மனு
குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், யூனியன் தலைவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கொரோனா பணிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், யூனியன் தலைவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கொரோனா பணிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
யூனியன் தலைவர்கள்
குமரி மாவட்ட அனைத்து பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் அமைப்பின் தலைவரும், திருவட்டார் யூனியன் தலைவருமான ஜெகநாதன் தலைமையில் யூனியன் தலைவர்கள் கிறிஸ்டல் ரமணிபாய் (கிள்ளியூர்), அருள் ஆன்றனி (தக்கலை), ஞானசவுந்தரி (மேல்புறம்), அனுஷா தேவி (குருந்தன்கோடு) உள்ளிட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் பொது நிதியில் இருக்கும் பணத்தை மாவட்ட திட்ட அலுவலகத்தில் கேட்பதை தவிர்க்க வேண்டும். யூனியன் பொது நிதியில் இருந்து எடுக்கப்பட்ட நிதியை அதன் வளர்ச்சி பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிறப்பு நிதி
கொரோனா தடுப்பு பணிகளுக்கு யூனியன் பொது நிதியில் இருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்காமல் அதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். யூனியன் பகுதிகளில் நடக்கும் திட்ட பணிகளுக்கான டெண்டர் அந்தந்த யூனியன் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
தற்போது கலெக்டர் அலுவலகத்தில் பேக்கேஜ் டெண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை உடனே கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணிகளில் சிவில் பணிகளை தேர்வு செய்து நிறைவேற்ற யூனியனுக்கு அனுமதி வழங்க ஆணை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story