சென்னையில் இருந்து பர்கூர் வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா


சென்னையில் இருந்து பர்கூர் வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jun 2020 6:45 AM IST (Updated: 5 Jun 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து பர்கூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது ஆண் ஒருவர், சென்னை அரும்பாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. இவை ஓசூரில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகிய 3 பேரையும் தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 

Next Story