கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தேனி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். அனைத்து அமைப்பு சாரா ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் அனைவருக்கும் கொரோனா ஊரடங்கு பாதிப்பு காலத்துக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், சுற்றுலா வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்துக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ஊரடங்கு காலத்தில் காலாவதியான காப்பீடு, அனுமதி சான்றுக்கான கால கட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட பொருளாளர் அழகர்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story