காந்தி மார்க்கெட்டை திறக்க உத்தரவிடாவிட்டால் காய்கறி வியாபாரத்தை நிறுத்தி காலவரையின்றி போராட்டம்


காந்தி மார்க்கெட்டை திறக்க உத்தரவிடாவிட்டால் காய்கறி வியாபாரத்தை நிறுத்தி காலவரையின்றி போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2020 7:43 AM IST (Updated: 5 Jun 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க உத்தரவிடாவிட்டால் காய்கறி வியாபாரத்தை காலவரையின்றி நிறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி, 

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க உத்தரவிடாவிட்டால் காய்கறி வியாபாரத்தை காலவரையின்றி நிறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மூடப்பட்ட காந்தி மார்க்கெட்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூடப்பட்டது. இதன் காரணமாக காந்தி மார்க்கெட்டில் நடைபெற்று வந்த காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால், 70 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள காந்தி மார்க்கெட்டை திறந்துவிட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்திக்கொண்டிருந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

காலவரையின்றி போராட்டம்

பின்னர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறும்போது, காந்தி மார்க்கெட்டை இன்னும் திறக்காமல் இருப்பது வேதனைஅளிக்கிறது. காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளாகிய நாங்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வியாபாரம் செய்ய தயாராக இருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என்ற உத்தரவாதத்தை மாவட்ட நிர்வாகம் வருகிற 7-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் 7-ந்தேதி இரவு முதல் முதல் காலவரையின்றி காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை நிறுத்தும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Next Story