வைகாசி விசாக திருவிழா இன்றி களை இழந்த முருகன் கோவில்கள்


வைகாசி விசாக திருவிழா இன்றி களை இழந்த முருகன் கோவில்கள்
x
தினத்தந்தி 5 Jun 2020 8:28 AM IST (Updated: 5 Jun 2020 8:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே உள்ள வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள்.

திருச்சி, 

முருகன் கோவில்களில், வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். திருச்சி அருகே உள்ள வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். 

ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. வயலூர் கோவிலில் நேற்று வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு சில பக்தர்கள் வெளியில் நின்றும், அருகில் உள்ள கருப்பு கோவிலில் கற்பூரம் ஏற்றியும் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். 

திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் உள்பட திருச்சி நகரில் உள்ள பல முருகன் கோவில்களும் மூடப்பட்டு இருந்ததால் களை இழந்து காணப்பட்டன.

Next Story