பெரம்பலூரை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கரூர் கோர்ட்டில் 4 பேர் சரண்


பெரம்பலூரை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கரூர் கோர்ட்டில் 4 பேர் சரண்
x
தினத்தந்தி 5 Jun 2020 8:51 AM IST (Updated: 5 Jun 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கரூர், 

பெரம்பலூரை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை

பெரம்பலூர் சங்குப்பேட்டை, நேரு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாண்டி என்ற வல்லத்தரசு (வயது 24). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் நகர மாணவர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2-ந்தேதி இரவு பெரம்பலூர் விளாமுத்தூர் சாலையில், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சூர்யாவுடன் (27) பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கத்தியால் வல்லத்தரசுவை குத்தி கொலை செய்தனர். அதை தடுத்த சூர்யாவையும் அந்த கும்பல் தலையில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகிச்சையில் இருந்த சூர்யாவிடம் விசாரணை நடத்தியதில், கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (30), விஜயராஜ் (30), கார்த்தி(29), ராஜா (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும போலீசார் தேடி வந்தனர்.

நீதிமன்றத்தில் சரண்

இந்தநிலையில், நேற்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில், பிரகாஷ் உள்பட 4 பேரும் சரணடைந்தனர். இதனையடுத்து நீதிபதி, அவர்கள் 4 பேரையும் ஜூன் 8-ந்தேதி வரை குளித்தலை கிளை சிறையில் அடைக்கவும், 9-ந்தேதி பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story