ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கக்கூடிய விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், ரேஷன் கடையில் விவசாய தொழிலாளர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை தொகுப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பால்சாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் ஆகியோர் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story