கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரணமாக ரூ.7,500 தொகையினை 6 மாதத்திற்கு வழங்க வேண்டும், இலவசமாக அரிசி, பருப்பு வழங்க வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கலையரசன், துணை தலைவர் குருவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story