திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் சிலை, உண்டியல் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் சிலை, உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தில் சாலையோரமாக நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசாலாட்சி என்பவர் பூஜை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விசாலாட்சி, கோவிலுக்கு வந்து பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை பூஜை செய்வ தற்காக அவர் கோவிலுக்கு வந்தார். அப்போது நாகாத்தம்மன் கற்சிலை பெயர்த்து எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்த உண்டியலும் மாயமாகி இருந்தது.
இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், சாமி சிலையை பெயர்த்து எடுத்ததோடு அருகில் இருந்த உண்டியலையும் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story