சென்னை கிண்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர், ஆம்புலன்சில் ஏற மறுத்து மயங்கி விழுந்து சாவு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர், ஆம்புலன்சில் ஏற மறுத்தபோது திடீரென மயங்கி விழுந்து பலியானார். ஆலந்தூரில் மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 65 வயது முதியவர், கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தற்காலிக நோய் தொற்று பரிசோதனை மையத்துக்கு மறு பரிசோதனை செய்ய அவர் அழைத்து வரப்பட்டார்.
மறுபரிசோதனைக்கு பிறகு அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் ஆம்புலன்சில் ஏற மறுத்த முதியவர், நான் ஆஸ்பத்திரிக்கு செல்லமாட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றார். இதையடுத்து மற்ற நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.
அப்போது பரிசோதனை மையத்தின் முன் முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் முதியவரின் உடலை ஈஞ்சம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்தனர்.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று வரை 284 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஆலந்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெருங்குடி மண்டலத்தில் இதுவரை 334 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 152 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். பெருங்குடி மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
பரங்கிமலைபல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு, மேடவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதியில் தலா 5 பேர் வீதம் 15 பேரும், பெரும்பாக்கத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story