கோவையில் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் 2 முகக்கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன


கோவையில் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஹால்டிக்கெட்  2 முகக்கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 6 Jun 2020 4:13 AM IST (Updated: 6 Jun 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

கோவை

தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டன. அதன்படி கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

அந்த பள்ளியில் தேர்வு எழுதப்போகும் 293 மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணியரசி ஹால் டிக்கெட்டுகளை வழங்கினார். அதனுடன் 2 முகக்கவசங்களும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

Next Story