கொரோனா பாதித்த பகுதியில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு


கொரோனா பாதித்த பகுதியில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2020 4:32 AM IST (Updated: 6 Jun 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலம் அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், மதிகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த தலா ஒருவர் வீதம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகூர்,

மதிகிருஷ்ணாபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் கொரோனாவால் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் பகுதியில் சென்னையில் பணிபுரிந்து வந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சென்று அங்கு சீல் வைக்கப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார். அங்கு வசித்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை, தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

பஞ்சாயத்து அதிகாரிகள் தலைமையில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டார். கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் நாராயணன், பாகூர் தாசில்தார் குமரன், பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story