தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் நாகநாதன், மாநிலக்குழு உறுப்பினர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊரடங்கால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை அனைவருக்கும் வழங்கிட வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ஜார்ஜ், சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் காதர் உசேன் நிறைவுரை ஆற்றினார்.
பட்டுக்கோட்டை
அதேபோல பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு தலைவர் குமரேசன், உறுப்பினர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
விவசாயிகள் உண்ணாவிரதம்
திருவோணம் ஒன்றியம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக ஊரணிபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவோணம் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story