புதுவையில் மேலும் 2 கட்டுப்பாட்டு மண்டலங்கள்


புதுவையில் மேலும் 2 கட்டுப்பாட்டு மண்டலங்கள்
x
தினத்தந்தி 6 Jun 2020 4:45 AM IST (Updated: 6 Jun 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மேலும் 2 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பம்பேட் அங்காளம்மன்கோவில் வீதி, தட்டாஞ்சாவடி கோரிமேடு காவலர் குடியிருப்பு ‘இ’ பிளாக் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story