இனாத்துக்கான்பட்டியில் வரத்து வாய்க்காலில் 3 கி.மீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு


இனாத்துக்கான்பட்டியில் வரத்து வாய்க்காலில் 3 கி.மீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2020 4:50 AM IST (Updated: 6 Jun 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையை அடுத்த இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து 1 வாரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். 

பின்னர் இனாத்துக்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு குறித்து கேட்டறிந்தார். இனாத்துக்கான்பட்டியில் உள்ள 3 கிராமங்களை பார்வையிட்ட அவர், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார அறிவுறுத்தியதுடன் 3 கிலோமீட்டர் தூரம் வரத்து வாய்க்காலில் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து விமானப்படை தள விரிவாக்க பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இனாத்துக்கான்பட்டி பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக நாஞ்சிக்கோட்டை மற்றும் துலுக்கம்பட்டி கிராமங்களில் மாற்று இடங்களை கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

Next Story