திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம்


திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Jun 2020 5:30 AM IST (Updated: 6 Jun 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது. புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேட்டூர் அணை சரபங்கா உபரி நீர் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி் மேலாண்மை ஆணையத்தை முடக்கும் உள்நோக்கத்துடன் ஜலசக்தி துறையுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் அங்காளம்மன் கோவில் தெருவில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்்ட தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் வரதராஜன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் சேகர், குணசேகரன், மூர்த்தி, ராஜேந்திரன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் உள்பட 20 இடங்களில் விவசாயிகள் தங்களின் வீடுகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி

மன்னர்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பன்னீர் செல்வம்,ராதா, தெய்வமணி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் விளை நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறை கட்டுப்பாட்டில் கொண்டு சென்று ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

அதேபோல திருமக்கோட்டையில் விவசாயி தினேஷ் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Next Story