கொடைரோடு அருகே மனமகிழ்மன்ற ஊழியர் கத்தியால் குத்தி கொலை


கொடைரோடு அருகே மனமகிழ்மன்ற ஊழியர் கத்தியால் குத்தி கொலை
x
தினத்தந்தி 6 Jun 2020 5:43 AM IST (Updated: 6 Jun 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே மனமகிழ்மன்ற ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொடைரோடு, 

கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 33). இவர், கொடைரோடு அருகே 4 வழிச்சாலை சடையாண்டிபுரம் பிரிவில் மனமகிழ் மன்றம் வைத்துள்ளார். இங்கு தாடிக்கொம்புவை சேர்ந்த செந்தில்குமார் (36), மாவூத்தன்பட்டியை சேர்ந்த செண்பகராஜன் (31) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி இரவு ராம்குமார், செந்தில்குமார் ஆகியோர் மனமகிழ்மன்றம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செண்பகராஜன், ராம்குமாரிடம் சம்பளம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து செண்பகராஜனை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செண்பகராஜன் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story