பாகிஸ்தான், சீனா அத்துமீறலை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
இந்திய எல்லையில் சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியை சேர்ந்த 7 பேர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள், சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரின் புகைப்படங்களை சாலையில் போட்டு எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தர்மா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேடசந்தூரில் ரவுண்டானா முருகன் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொதுச்செயலாளர் ரவிபாலன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story