திருப்பரங்குன்றம் அருகே கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்
திருப்பரங்குன்றம் அருகே இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம்,
விளைநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கண்டித்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் போடப்பட்டது. அப்போது, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் தாலுகா தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். முன்னதாக, இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளின் வீடுகள் மற்றும் நிலங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது. ஊரின் இருபுறமும் உள்ள ரோட்டோரங்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மெய்ராஜன், முஜிபூர் ரகுமான், அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story