நெல்லையில் சீன கொடியை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 33 பேர் கைது


நெல்லையில் சீன கொடியை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 33 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2020 8:25 AM IST (Updated: 6 Jun 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சீன கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் சீன கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடி எரிப்பு போராட்டம்

இந்திய எல்லையில் ராணுவத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் சீன அரசை கண்டித்தும், சீனாவில் தயாரித்து விற்பனைக்கு வருகின்ற பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை டவுனில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் சீனாவின் தேசிய கொடியை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜாபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயல் தலைவர் முருகானந்தம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

33 பேர் கைது

இதில் கலந்து கொண்டவர்கள் சீன கொடியை எரிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த கொடியை கைப்பற்றினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் சீன அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 33 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story