மக்களை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு
மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் அரசு செய்து வரும் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம், சுபகர குடிநீர் போன்றவற்றை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்திய தேசமே பாராட்டும் வகையில் தமிழகம் திகழ்கிறது. 3,280 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை, தொடர்ந்து 3 மாதங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைக்கு மக்களை திசை திருப்பும் வேலையை மட்டும் கடமையாக எண்ணி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பணி மறந்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆகையால் மக்களும் அவரை மறந்து விட்டார்கள். மக்களின் மனதில் அ.தி.மு.க. மட்டும் தான் இருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பேரவை நிர்வாகி வெற்றிவேல், ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story