நெல்லையில் ஊரடங்கை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு


நெல்லையில் ஊரடங்கை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Jun 2020 8:43 AM IST (Updated: 6 Jun 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஊரடங்கை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லையில் ஊரடங்கை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

முன்னாள் அமைச்சருக்கு வரவேற்பு

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், நெல்லை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். இதில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

50 பேர் மீது வழக்கு

இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, ஊரடங்கு உத்தரவை மீறியதாக மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, நெல்லை மாநகர பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடத்தியதாக மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story