புள்ளம்பாடி ஒன்றியத்தில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணபொருட்கள் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்


புள்ளம்பாடி ஒன்றியத்தில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணபொருட்கள் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 6 Jun 2020 9:54 AM IST (Updated: 6 Jun 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

26 ஊராட்சிகளில் இதுவரை சுமார் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணபொருட்களை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

கல்லக்குடி, 

புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூராட்சிகளில் 15 வார்டு மக்களுக்கும், காணகிளியநல்லூர், சிறுகளப்பூர், தாப்பாய், வரகுப்பை, மேலரசூர், மால்வாய், கல்லகம், சாத்தப்பாடி, ஒரத்தூர், எம்.கண்ணணூர், சரடமங்கலம், கண்ணாக்குடி, ரெட்டிமாங்குடி, ஊட்டத்தூர், பெருவளப்பூர், நம்புக்குறிச்சி, நெய்குளம், பி.கே.அகரம், கோவண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், புதூர்பாளையம், விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாடிமேட்டூர் உள்பட 26 ஊராட்சிகளில் இதுவரை சுமார் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணபொருட்களை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தருமன் ராஜேந்திரன், புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் ரசியா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலெட்சுமி கருணாநிதி ஆகியோரும் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பேரூர் கழக செயலாளர்கள் பால்துரை, முத்துகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story