ராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம், ரெகுநாதபுரம், ஆர்.எஸ்.மடை, தேவிபட்டினம், ஆர்.காவனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி காலை 9.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை, பாரதிநகர், கலெக்டர் அலுவலக பகுதி, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி பகுதி, திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வண்ணிக்குடி, ரெகுநாதபுரம், பெரியபட்டணம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்குக்காட்டூர், நைனா மரைக்கான், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழக பகுதி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை, ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story