சத்திரக்குடி அருகே நடந்த பெண் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை
சத்திரக்குடி அருகே நடந்த பெண் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது எட்டிவயல். இந்த ஊரை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மனைவி தெய்வானை (வயது 53). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி அந்த பகுதி வயல்வெளியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் பல மாதங்களாக போலீசார் துப்பு துலக்கியும் குற்றத்திற்கான காரணமோ, குற்றவாளிகள் குறித்தோ தகவல் கிடைக்கவில்லை.
விசாரணை
இதன்காரணமாக குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story