போகலூர் ஒன்றியத்தில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் யூனியன் தலைவர் தகவல்


போகலூர் ஒன்றியத்தில்  ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்  யூனியன் தலைவர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 10:40 AM IST (Updated: 6 Jun 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

போகலூர் ஒன்றியத்தில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற இருப்பதாக யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி,

போகலூர் யூனியன் கூட்டம் அதன் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜகோபாலன் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இதில் யூனியன் அலுவலகத்தில் தனியாக சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை அனைவருக்கும் சமமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லம்மாள் நன்றி கூறினார். அதன் பின்னர் யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:- போகலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் பொட்டித்தட்டி ஆதி திராவிட காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், முதலூர் ஊராட்சி துரத்தியேந்தல் கிராமத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்டு சாலை அமைத்தல், அ.புத்தூர் சாலையில் இருந்து முத்துசெல்லாபுரம் சாலையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல் உள்பட மொத்தம் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story