தமிழகத்தில் 32 இடங்களில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ; அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்


தமிழகத்தில் 32 இடங்களில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ; அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 10:58 AM IST (Updated: 6 Jun 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் 32 இடங்களில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1985-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1994-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் தற்போது 732 ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள்.

சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை நீடிக்கும். பால் பாக்கெட், மளிகை சாமான்கள் பேக் செய்யும் கவர்களுக்கு தடை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், பேரூர் கழக செயலாளர் பாவணன், கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாாளர் தங்கவேல், எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன், ராமலிங்கம், ஆசிரியர் சரவணன், பசுமை நிழல்கள் அமைப்பு தலைமையாசிரியர் அண்ணாமலை, கருணாநிதி, விஸ்வநாதன், மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story