திருப்பூரில் வெட்டிவேரால் தயாரிக்கப்பட்ட முககவசம் மருத்துவ குணங்கள் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு
திருப்பூருக்கு வெட்டிவேரால் தயாரிக்கப்பட்டுள்ள முககவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
திருப்பூர்,
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அரசு சார்பில் பல அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இதுபோல் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முககவச தயாரிப்பு திருப்பூரில் மும்முரமாக நடந்து வருகிறது.
வெட்டிவேரால் முககவசம் தயாரிப்பு
இந்த முககவசங்களுக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆர்டர்களின்படி முககவசங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால் வர்த்தக போட்டி அதிகமாக நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய, புதிய வடிவில் முககவசங்களை தயார் செய்து வருகிறார்கள்.
நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த சோட்டா பீம் உள்ளிட்ட கார்ட்டூன் படங்களை பயன்படுத்தியும் இந்த முககவச தயாரிப்பு நடந்து வருகிறது. தற்போது திருப்பூருக்கு வெட்டிவேரால் தயாரிக்கப்பட்டுள்ள முககவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இது பலரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.
கிருமிகளை அழிக்கும்
இது குறித்து வெட்டிவேர் முககவச தயாரிப்பாளர் ரதி கூறியதாவது:-
வெட்டிவேருக்கு கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதன் காரணமாக இதனை பயன்படுத்தி முககவசம் தயாரித்து வருகிறோம். பலரிடமும் இது வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story