தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சத்தில் தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தென் மாவட்டங்களில் முதலாவதாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவி (இக்லியா) அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரத்தத்தில் உள்ள உயிர் வேதியியல் பொருட்களை பகுப்பாய்வு செய்து கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி, துணை முதல்வர் கலைவாணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பொன்இசக்கி, முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story