பல்லாவரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தனது வயதான தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தாம்பரம்,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், அண்ணா நகர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 53). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது இவர், கிண்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இவர், தனது தாய் கண்ணம்மாள் (87), மனைவி சீமா(48) மற்றும் மகள் சொர்ணா (22) ஆகியோருடன் வசித்து வந்தார்.
அவருடைய மகள் சொர்ணா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜ் கண்டித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவும் இதுபோலவே செல்போனில் தொடர்ந்து பேசிய மகளை, நடராஜ் கண்டித்தார்.
இதனால் மனைவி மற்றும் மகளுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. 2 பேரிடமும் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் செல்போனையும் கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்த நடராஜ், நேற்று காலை மனைவி மற்றும் மகள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் அவ்வாறு தான் மட்டும் இறந்துவிட்டால், வயதான தனது தாயை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதி, தாய் மகன் இருவரும் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர் நகர் போலீசார், தூக்கில் தொங்கிய கண்ணம்மாள் உடலை மீட்டனர். உயிருக்கு போராடிய நடராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழிலேயே அவரும் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத்தகராறில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தனது தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story