சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி-புதிதாக 378 பேருக்கு வைரஸ் தொற்று
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 378 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4,776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 378 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 333 பேர் மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,154 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். அதாவது பீதரை சேர்ந்த 55 வயது பெண், விஜயாப்புராவை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 1,968 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,184 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் உடுப்பியில் 121 பேர், கலபுரகியில் 69 பேர், யாதகிரியில் 103 பேர், பெங்களூரு நகரில் 18 பேர், ராய்ச்சூரில் 2 பேர், மண்டியாவில் 3 பேர், பெலகாவியில் 5 பேர், பீதரில் ஒருவர், ஹாசனில் 3 பேர், விஜயாப்புராவில் 6 பேர், தாவணகெரேயில் 6 பேர், தட்சிண கன்னடாவில் 24 பேர், சிக்பள்ளாப்பூரில் 2 பேர், உத்தர கன்னடாவில் 2 பேர், தார்வாரில் 3 பேர், கதக்கில் 4 பேர், துமகூருவில் ஒருவர், கோலாரில் ஒருவர், ஹாவேரியில் 3 பேர், கொப்பலில் ஒருவர் உள்ளனர்.
கர்நாடகத்தில் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11 ஆயிரத்து 862 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 35 ஆயிரத்து 632 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் பசுமை மண்டலத்தில் தொடர்ந்து நீடித்து வரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை தவிர மற்ற 29 மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று பரவியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், கர்நாடகம்-தமிழகம் எல்லையில் அமைந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள சேலம், ஈரோடு மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளது.
கர்நாடகத்தில் அந்த மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான ராமநகர், மைசூரு மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. ஆனால் இதுவரை சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும்போது அவற்றின் மத்தியில் உள்ள மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story