மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலையை தனியாருக்கு விற்கக்கூடாது எடியூரப்பாவுக்கு - சித்தராமையா கடிதம்
மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலையை தனியாருக்கு விற்கக்கூடாது என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மைசூரு மன்னராக இருந்த நால்வடி கிருஷ்ணராஜ உடையார் சிறப்பு கவனம் செலுத்தி, மைசூரு சர்க்கரை ஆலையை உருவாக்கினார். அடுத்த வந்த நாட்களில் அதை மைசுகர் சர்க்கரை ஆலை என்று அழைத்தனர். அந்த ஆலையில் 14 ஆயிரத்து 46 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த ஆலை தினமும் 5 ஆயிரம் டன் கரும்பை அரைக்கும் திறன் உடையது. முன்பு அதாவது ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் கரும்பு அரவை பணியை மேற்கொண்டது. மண்டியா மாவட்டத்தில் மட்டும் 35 லட்சம் டன் கரும்பு விளைவிக்கிறார்கள். அதே போல் மண்டியாவின் அண்டை மாவட்டங்களிலும் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்கிறார்கள்.
குளுக்கோஸ், டிஸ்டலரி தண்ணீர், சாக்லேட் மற்றும் எத்தனால் ஆகியவற்றையும் அந்த ஆலை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலை தனது லாபத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேல் 30 சதவீதம் அளவுக்கு அரசுக்கு பங்குத்தொகை வழங்கியது. அந்த நிறுவனத்திற்கு மண்டியா மாவட்டத்தில் மட்டும் 207 ஏக்கர் நிலம் உள்ளது.
விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, மண்டியாவை போன்ற நகரங்கள் உருவானதில் மைசுகர் ஆலையின் பங்கு முக்கியமானது. இத்தகைய நீண்ட வரலாறு கொண்ட மைசுகர் ஆலையை தனியாருக்கு விற்க அரசு முடிவு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது சரியான நடவடிக்கை அல்ல.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த ஆலைக்கு ரூ.229 கோடி வழங்கி அதை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடைய அந்த ஆலையை எக்காரணம் கொண்டும் தனியாருக்கு விற்கக்கூடாது. அரசே நிதி உதவி வழங்கி அந்த ஆலையை பலப்படுத்த வேண்டும்.
அந்த ஆலையின் கரும்பு அரைக்கும் திறனை அதிகரித்து, அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளை காக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story