வெளிமாநிலத்தில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: பள்ளப்பட்டியில், மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு


வெளிமாநிலத்தில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: பள்ளப்பட்டியில், மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2020 11:02 AM IST (Updated: 7 Jun 2020 11:02 AM IST)
t-max-icont-min-icon

பள்ளப்பட்டிக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரவக்குறிச்சி, 

பள்ளப்பட்டிக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மராட்டியம், குஜராத், சென்னை உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வரும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

60 பேர் கொண்ட குழு

அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் பள்ளப்பட்டி பஸ் நிலையம், சந்தை, கடைவீதி, பள்ளிவாசல்கள் உள்ளிட்ட 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. முகாம்களில், கபசுர குடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சந்தோஷ்குமார் மேற்பார்வையில், 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிருமிநாசினி தெளிக்க ஏற்கனவே உள்ள எந்திர விசை தெளிப்பான்களுடன் சேர்த்து புதிதாக கிரேப் மாஸ்டர் ப்ளாஸ்ட் பிளஸ் என்ற கருவி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அதன் மூலம் கிருமிநாசினி தெளிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பள்ளப்பட்டி பஸ்நிலையம் அருகில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். இப்பணிகளை உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story