மலைப்பகுதியில் தொடர் மழை: பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து
மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
தென்காசி,
குற்றாலத்தில் நேற்று முன்தினம் சீசன் தொடங்கியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்றும் காலையில் இருந்தே குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வந்தது. இதேபோன்று சுற்றுவட்டார பகுதிகளான தென்காசி, செங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. வெயிலே இல்லை. மேக மூட்டமாக இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழுந்த நிலையில் நேற்று பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் விழ தொடங்கியது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அருவி பாதைகளும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாரையும் குளிக்க அனுமதிக்க வில்லை. இதனால் அருவிக்கரைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.

Related Tags :
Next Story